×
Saravana Stores

லால்குடி, மண்ணச்சநல்லூர் பகுதியில் 54 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

லால்குடி, மே 5: லால்குடி மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 54 கிலோ புகையிலை பொருட்களை உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் மொத்த விற்பனை செய்து வருவதாக திருச்சி உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான குழுவினர் மண்ணச்சநல்லூர் பகுதியில் சோதனை ஈடுபட்டனர். அப்போது ஆனந்தபிரகாஷ் என்பவரின் இரு சக்கர வாகனத்தை வழிமறித்து சோதனை செய்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்து சுமார் 40 கிலோ மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 4 சட்டப்பூர்வ உணவு மாதிரி எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படுள்ளது.

மேலும், லால்குடியை அடுத்த மாந்துறை பகுதியை சார்ந்த குரலரசன் என்பவர் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை வாங்கி செல்ல முயன்றபோது அவரிடம் இருந்த பொருட்களும் மற்றும் இரு சக்கர வாகனம் கைப்பற்றபட்டது. தொடர்ந்து மண்ணச்சநல்லூர் மற்றும் சமயபுரம் காவல் நிலையத்தில் இரண்டு நபரையும் அவர்களது வாகனமும் மேல்நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டன.

தொடர்ந்து கல்லக்குடியில் அக்பர் அலி என்பவரிடமிருந்து 14 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டு மேல் நடவடிக்கைக்காக கல்லக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், இது போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் 99 44 95 95 95 என்ற தொலைபேசி எண்ணிலும், மாநில புகார் எண் 94 44 04 23 22 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அன்புச்செல்வன், செல்வராஜ், இப்ராஹிம், கந்தவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

The post லால்குடி, மண்ணச்சநல்லூர் பகுதியில் 54 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Lalgudi, Mannachanallur ,Lalgudi ,safety ,Tamil government ,Manachanallur ,MANNACHANALLUR AREA ,TRICHI DISTRICT ,Dinakaran ,
× RELATED குமுளூர் வேளாண் கல்வி நிலையத்தில் மூங்கில் வளர்க்க தொழில்நுட்ப பயிற்சி