- தூத்துக்குடி
- தூத்துக்குடி
- சண்முகபுரம்
- Balasingh
- முத்துராஜ்
- வண்ணார் 3வது தெரு, சண்முகபுரம், தூத்துக்குடி
தூத்துக்குடி, மே 5: தூத்துக்குடி சண்முகாபுரம் பகுதியில் பைக் விபத்தில் தடுமாறி விழுந்து படுகாயம் அடைந்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தூத்துக்குடி சண்முகாபுரம் வண்ணார் 3வது தெருவைச் சேர்ந்த முத்துராஜ் மகன் பாலசிங்(26). இவர் மே 1ம்தேதி தனது பைக்கில் வண்ணார் 3வது தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இதில் தலை மற்றும் உடலில் படுகாயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கே அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து பாலசிங் அம்மா புஷ்பராணி(52) அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.
The post தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் பலி appeared first on Dinakaran.
