- கூட்டுறவு
- -கூட்டுறவு சங்கம்
- அமைச்சர் கே.
- பெரியகரப்பன்
- காரைக்குடி
- அமைச்சர்
- கே.ஆர்
- கி. பெரியகரப்பன்
- ஆதிமுக ஊராட்சி
- எடப்பாடி பழனிசாமி
- -கூட்டுறவு
- சங்கம்
- தின மலர்
காரைக்குடி: நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட்ட அதிமுக அரசு தவணை முறையில் தான் உள்ளாட்சி தேர்தலை நடத்தினர். இதில் 55 சதவீதம் பெற்று அன்று எதிர்க்கட்சியாக இருந்த திமுக வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நடத்தப்படாமல் இருந்த 9 மாவட்டங்களுக்கான ஊரகப்பகுதிகளுக்கான தேர்தல், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டியது. அதுபோல தற்போது கூட்டுறவு சங்கங்களுக்கான பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. சிறப்பு அலுவலர்கள் மூலம் அந்த பணிகள் நடந்தது வருகிறது.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்தபிறகு முறையாக தேர்தல் பணிகள் செய்ய கூட்டுறவுத்துறை தயாராக உள்ளது. வாக்காளர் பட்டியல் சரிபார்க்க வேண்டும், உறுப்பினர் சேர்க்கைக்கு வாய்ப்பு தர வேண்டும் என அனைத்தும் பணிகளும் முடிந்து தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு தெரிவித்தார்.
The post நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின் விரைவில் கூட்டுறவு சங்க தேர்தல்: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தகவல் appeared first on Dinakaran.