×

மாடு குறுக்கே வந்ததால் டூவீலரில் சென்ற வாலிபர் பலி

ஆர்எஸ்.மங்கலம், மே 5: ஆர்.எஸ். மங்கலம் கருங்குடி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் பார்த்திபன் (35). மிக்சர் வியாபாரி. இந்நிலையில் நேற்று தனது டூவீலரில் வியாபாரத்திற்கு சென்று விட்டு மீண்டும் தனது ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். திருப்பாலைக்குடியில் இருந்து பால்குளம் அம்மன் கோயில் அருகே வந்தபோது, திடீரென மாடு குறுக்கே வந்தது. இதனால் டூவீலர் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பார்த்திபன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரில் திருப்பாலைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

The post மாடு குறுக்கே வந்ததால் டூவீலரில் சென்ற வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : RS.Mangalam ,Govindan ,Parthiban ,Mangalam Karunkudi ,Balkulam Amman ,Tirupalaikudi ,
× RELATED ஆர்எஸ்.மங்கலம் அருகே கார் கண்ணாடியை...