×

கோவையில் இருந்து நீலகிரிக்கு 40 சிறப்பு பஸ்

 

கோவை, மே 5: ஊட்டியில் வரும் 10ம் தேதி மலர்கண்காட்சி தொடங்குகிறது. இதன்காரணமாக ஊட்டிக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து உள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு செல்லும் தமிழக பயணிகள் கோவை வந்து செல்ல வேண்டும். கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு அதிகளவு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. வரும் 7ம் தேதி முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

இதையடுத்து இ-பாஸ் கிடைக்காத பொதுமக்கள் கோவை வரை காரில் வந்து விட்டு பின்னர் அரசு பஸ்களில் ஊட்டி செல்ல வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கோவையில் இருந்து தற்போது இயக்கப்படும் அரசு பஸ்களை விட கூடுதலாக 40 சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டது. கோவையில் இருந்து ஊட்டிக்கு கூடுதலாக 20 பஸ்களும், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 20 பஸ்கள் என மொத்தம் 40 பஸ்கள் இயக்கப்படுகிறது.

The post கோவையில் இருந்து நீலகிரிக்கு 40 சிறப்பு பஸ் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Nilgiris ,Ooty ,Tamilnadu ,Nilgiris district ,Coimbatore Mettupalayam… ,
× RELATED ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில்...