×

சுற்றுச்சூழலை பாதிப்பதாக சவுடு மண் ஏற்றிச்சென்ற 30 லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

 

திரு வள்ளூர், மே 5: பெரியபாளையம் அருகே சாலைப்பணிக்காக சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில், சவுடு மண் ஏற்றிச்சென்ற 30க்கும் மேற்பட்ட லாரிகளை, கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. திருவள்ளூர் மாவட்டம், தச்சூரிலிருந்து – ஆந்திர மாநிலம், சித்தூர் வரை 6 வழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.

இதற்காக எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே அத்தங்கி காவனூர் கிராமத்தில் உள்ள ஏரியிலிருந்தும், இதேபோன்று வேம்பேடு கிராம ஏரியில் செயல்படும் தனியார் மண் குவாரியில் இருந்தும் நாள்தோறும், 100க்கும் மேற்பட்ட லாரிகளில் விதிகளை மீறி தார்ப்பாய் ஏதும் போர்த்தாமல் சவுடு மண் ஏற்றிக்கொண்டு அத்தங்கி காவனூர் வழியாக செல்வதால், சுற்றுச்சூழக்கு கேடு விளைவிப்பதோடு, சாலைகள் சேதமடைந்து அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகிறது.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அத்தங்கி காவனூர் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர், அவ்வழியாக குவாரியிலிருந்து சவுடு மண் ஏற்றிச்சென்ற 30க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு லாரி ஓட்டுநர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post சுற்றுச்சூழலை பாதிப்பதாக சவுடு மண் ஏற்றிச்சென்ற 30 லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Thiru Vallur ,Periyapalayam ,Tiruvallur district ,Thachur – Andhra ,
× RELATED மின்விளக்குகள் எரியாத புதிய மேம்பாலம்: பெரியபாளையம் அருகே விபத்து அபாயம்