×

மக்களவை தேர்தலை பார்க்க 23 நாடு பிரதிநிதிகள் வருகை

புதுடெல்லி: இந்தியாவில் நடந்து வரும் மக்களவை தேர்தல் மற்றும் அதற்கான நடைமுறைகளை அறிந்து கொள்வதற்காக 23 நாடுகளை சேர்ந்த தேர்தல் நிர்வாக பிரதிநிதிகள் 75 பேர் இந்தியா வந்துள்ளனர். இவர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து பல்வேறு தொகுதிகளில் நடைபெறும் தேர்தல் மற்றும் அது தொடர்பான ஏற்பாடுகளை பார்வையிடுவார்கள். பூட்டான், மங்கோலியா, ஆஸ்திரேலியான, மடகாஸ்கர், கிர்கிஸ், பிலிப்பைன்ஸ் இலங்கை, வங்கதேசம்,கஜகஸ்தான், ஜார்ஜியா, சிலி, உஸ்பெகிஸ்தான், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளின் தேர்தல் நிர்வாக அமைப்புகளின் பிரிதிநிதிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

The post மக்களவை தேர்தலை பார்க்க 23 நாடு பிரதிநிதிகள் வருகை appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,New Delhi ,India ,Lok Sabha ,
× RELATED மக்களவை தேர்தலில் 751 கட்சிகள் போட்டி: 104 சதவீதம் அதிகரிப்பு