×

ஊழல் செய்தவர்கள் மீது அடுத்த 5 ஆண்டுகளில் சட்ட நடவடிக்கை: பிரதமர் மோடி உறுதி

சிசாய்: ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது அடுத்த 5 ஆண்டுகளில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம், லோகர்தகா மக்களவை தொகுதி பாஜ வேட்பாளரை ஆதரித்து கும்பலாவின் சிசாய் பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

பொதுமக்களிடையே பேசிய பிரதமர் மோடி, ‘‘ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஊழல் செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பொதுமக்களுக்கான அச்சுறுத்தலை துடைப்பதற்கு மோடி உறுதி பூண்டுள்ளார். ஊழல் சக்திகளின் முகமூடிகளை தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான அரசு அவிழ்த்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஊழலில் ஈடுபட்ட அனைவரும் சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.

இந்தியா கூட்டணி தலைவர்கள் , கழுத்து வரை ஊழலால் திளைத்தவர்கள் டெல்லி மற்றும் ராஞ்சியில் பேரணி நடத்துகிறார்கள். ஊழல்வாதிகளுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். இது அவர்களின் உண்மையான தன்மையை வெளிக்கொணர்ந்துள்ளது. ஏழை மக்களுக்காக இலவச ரேஷன் பொருட்கள் வழங்குவதை பூமியில் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. இது தான் மோடியின் உத்தரவாதம்” என்றார்.

ராகுல் பிரதமராக பாக். பிரார்த்தனை
பாலமு பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,‘‘எதிரிகளின் எல்லைக்குள் நுழைந்து தாக்குவது எப்படி என்பது புதிய இந்தியாவுக்கு தெரியும். இப்போது சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் வான் வழி தாக்குதல்களால் அதிர்ந்த பாகிஸ்தானில் உள்ள தலைவர்கள் காங்கிரஸ் கட்சியின் இளவரசர்(ராகுல்காந்தி) இந்தியாவின் பிரதமராக வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள்” என்றார்.

The post ஊழல் செய்தவர்கள் மீது அடுத்த 5 ஆண்டுகளில் சட்ட நடவடிக்கை: பிரதமர் மோடி உறுதி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Chisai ,Modi ,Sisai ,Kumbala ,Lok Sabha ,Lokhartha ,Jharkhand ,
× RELATED எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை...