×
Saravana Stores

மக்களவை 3ம் கட்ட தேர்தல்; 94 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது: குஜராத் உள்பட 12 மாநிலங்களில் நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் 3ம் கட்டமாக 94 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது. குஜராத் உள்பட 12 மாநிலங்களில் நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு நடக்கிறது. நாட்டின் 18வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த ஏப். 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 ெதாகுதிகளில் நடைபெற்றது. அதேபோல் 2ம் கட்ட தேர்தல் ஏப். 26ம் தேதி கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 88 தொகுதிகளுக்கு நடைபெற்றது.

மூன்றாம் கட்ட தேர்தல் 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால் சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 8 சுயேட்சை வேட்பாளர்கள் வாபஸ் பெற்றதால் சூரத் பா.ஜ வேட்பாளர் முகேஷ் குமார் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அதனால் குஜராத்தில் 25 ெதாகுதிகளில் தேர்தல் நடக்கிறது. அதே சமயம் மத்திய பிரதேசத்தின் பெத்துல் மக்களவைத் தொகுதியில் ஏப். 26ம் தேதி தேர்தல் நடைபெறவிருந்தது.

இந்நிலையில் இத்தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் இறந்ததால் இங்கு தேர்தல் வரும் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த 94 தொகுதிகளிலும் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது. அங்கும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்கிறது. 3வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் 94 ெதாகுதிகளில் 1,351 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முக்கியமாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒன்றிய அமைச்சர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, பிரகலாத் ஜோஷி, முன்னாள் முதல்வர்கள் சிவராஜ்சிங் சவுகான், திக்விஜய்சிங், காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்திரி ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

இதற்கிடையே 4ம் கட்ட தேர்தலில் 1,717 பேர் களத்தில் இருப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. வரும் 13ம் தேதி 4ம் கட்டமாக 96 ெதாகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

ஸ்டார் வேட்பாளர்கள்
1.ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா(பா.ஜ)-காந்திநகர்(குஜராத்)
2.ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா (பாஜ) – குணா (மத்தியப் பிரதேசம்)
3.ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி (பாஜ) – தார்வாட் (கர்நாடகா)
4.முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் (பாஜ) – விதிஷா (மத்தியப் பிரதேசம்)
5.முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் (காங்கிரஸ்) – ராஜ்கர்(மத்தியப்பிரதேசம்)
6. மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்திரி- பெர்ஹாம்பூர்(மேற்குவங்காளம்)
7. சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்யாதவ் மனைவி டிம்பிள்யாதவ்- மெயின்புரி (உத்தரபிரதேசம்)
8. தேசியவாத காங்கிரஸ்(சரத்சந்திரபவார் பிரிவு) தலைவர் சரத்பவார் மகள் சுப்ரியா சுலே – பாராமதி (மகாராஷ்டிரா)

The post மக்களவை 3ம் கட்ட தேர்தல்; 94 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது: குஜராத் உள்பட 12 மாநிலங்களில் நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha 3rd Phase Election ,Gujarat ,New Delhi ,Lok Sabha elections ,18th Lok Sabha election ,Lok Sabha ,3rd phase election ,Dinakaran ,
× RELATED சிறையில் உள்ள பிரபல தாதாவான லாரன்சை...