- ராகுல் இளவரசன்
- மோடி
- பிரியங்கா காந்தி
- லகானி
- காங்கிரஸ்
- பொதுச்செயலர்
- பிரதமர் மோடி
- ராகுல்
- கட்சி பொதுச் செயலாளர்
- பிரியங்கா
- குஜராத்
- மக்களவை
- பேரரசர்
லக்ஹானி: எனது சகோதரர் ராகுல் இளவரசர் என்றால் அரண்மனையில் வசிக்கும் பிரதமர் மோடி பேரரசர் என்று காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்து உள்ளார். குஜராத்தின் பனாஸ்கந்தா மக்களவை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
லக்ஹானியில் பேசிய பிரியங்கா காந்தி,‘‘எனது சகோதரரை இளவரசர் என்கிறார். நான் அவருக்கு ஒன்று கூற விரும்புகிறேன். இந்த இளவரசர் தான் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4000கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டு மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார். சகோதரர்கள், சகோதரிகள், விவசாயிகள், தொழிலாளர்களை சந்தித்தார். அவர்களின் பிரச்னைகளை நாம் எவ்வாறு தீர்ப்பது என்று கேட்டறிந்தார். ஆனால் மற்றொரு பக்கம் அரசர்களுக்கெல்லாம் அரசரான பேரரசர் மோடி அரண்மனையில் வசிக்கிறார்.
அவரை நீங்கள் டிவியில் பார்த்து இருக்கிறீர்களா? ஒரு தூசி கூட இல்லாமல், தவறான முடி இழை இல்லாமல் சுத்தமான ஆடையுடன் காட்சி அளிக்கிறார். உங்களின் உழைப்பு, விவசாயம் ஆகியவற்றை அவர் எப்படி புரிந்துகொள்வார்? பணவீக்கத்தால் நீங்கள் அதிக சுமையில் உள்ளீர்கள் என்பதை அவரால் எப்படி புரிந்து கொள்வார்? இன்றைய அரசியலை நீங்கள் புரிந்து கொண்டால் கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் செய்த மிகப்பெரிய விஷயம் பொதுமக்களின் உரிமைகளை பலவீனப்படுத்தியது புரியும்” என்றார்.
The post ராகுல் இளவரசர் என்றால் அரண்மனையில் வசிக்கும் மோடி பேரரசர்: பிரியங்காகாந்தி கடும் விளாசல் appeared first on Dinakaran.