ஊட்டி: ஆண்டு தோறும் கோடை விடுமுறையின் போது ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை மூலம் பல்வேறு கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதே சமயம் சில தனியார் அமைப்புகள் சார்பிலும் கோடை விடுமுறையின் போது, சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நாய் கண்காட்சி, குதிரை பந்தயம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
இந்த ஆண்டு வரும் 10ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் ஊட்டியில் நாய்கள் கண்காட்சி ஊட்டி அரசு கலைக்கல்லூரியில்நடத்தப்படுகிறது. இதில், காவல்துறை நாய்கள், ஜெர்மன் செப்பர்டு, லேப், கிரேட் மற்றும் நாட்டு வகைளான ராஜபாளையம், சிப்பி பாறை, கொம்பை, கன்னி போன்ற வகைகளை சேர்ந்த நாய்கள் கீழ் படிதல் போட்டியில் பங்கேற்கின்றன. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 450க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்கும் என கண்காட்சி குழுவினர் தெரிவித்தனர்.
The post ஊட்டியில் நாய்கள் கண்காட்சி 10ம் தேதி துவக்கம் appeared first on Dinakaran.