- அமித் ஷா
- காந்தி நகரம்
- குஜராத்
- பாகீர்
- அமித் ஷா
- காந்திநகர்
- பஜக-வினர்
- மாநில பொலிஸ்
- காந்தி
- தின மலர்
- குஜராத் கிரைம் காவல
குஜராத்: குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் அமித்ஷாவை எதிர்த்து களமிறங்கிய 16 பேர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக-வினர் மற்றும் குஜராத் மாநில போலீசாரின் அச்சுறுத்தலால் போட்டியில் இருந்து விலகியதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். குஜராத் தலைநகர் காந்தி நகர் மக்களவை தொகுதிக்கு வரும் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பாஜக சார்பில் மீண்டும் போட்டியிடும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த முறையும் பல லட்ச வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளார்.
ஆனால் இதற்காக பல வேட்பாளர்களை மிரட்டி போட்டியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சூரத்தில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அன்றைய தினமே சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காந்தி நகரில் சுயேச்சையாக போட்டியிடுவதாக கூறிய சுஜேந்திர சௌகான் என்பவர் தம்மை பாஜக-வினர் மிரட்டி வருவதாகவும், தாம் கொல்லப்படலாம் என்றும் வீடியோவில் கூறியிருந்தார். வீடியோ வெளியான மறுதினமே அவர் வேட்பு மனுவையும் வாபஸ் பெற்றுள்ளார்.
பாஜகவினர் மற்றும் போலீசாரிடம் இருந்து வந்த அழுத்தம் தமது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தாம் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார். காந்தி நகர் தொகுதியில் களமிறங்கியவர்களில் ஒட்டு மொத்தமாக 16பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். போட்டியில் விலகிய பலரும் தாங்கள் பாஜகவினர் மற்றும் குஜராத் குற்றப்பிரிவு போலீசாரால் மிரட்டப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். சூரத்தில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வவான நிலையில் காந்தி நகரில் அமித்ஷாவை எதிர்த்து களமிறங்கிய 16 பேர் மிரட்டலை அடுத்து பின்வாங்கிய சம்பவம் குஜராத் அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
The post காந்தி நகரில் அமித் ஷா-வை எதிர்த்து களமிறங்கிய 16 பேர் விலகல்: குஜராத் குற்றப்பிரிவு போலீஸாரே மிரட்டல் விடுத்ததாக பகீர் தகவல் appeared first on Dinakaran.