×

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 17 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல்..!!

ஆந்திரா: ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 17 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் வருகின்ற 13ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நடைமுறைகள் அமலில் இருப்பதால், தேர்தல் பறக்கும்படையினர் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காக்கிநாடா மாவட்டம் பித்தாபுரத்தில் இன்று அதிகாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை சோதனை செய்ததில், இரும்புப் பெட்டியில் தங்கக் கட்டிகள் இருந்தது அம்பலமானது.

இதன் மதிப்பு சுமார் 17 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டதில், முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், பித்தாபுரம் தாசில்தார் அலுவலகத்திற்கு வாகனம் மற்றும் தங்கக் கட்டிகளை எடுத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தங்கக்கட்டிகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, எங்கு கொண்டுசெல்லப்படுகிறது போன்றவை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

The post ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 17 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : AP ,Kakinada ,Andhra Pradesh ,AP State ,Dinakaran ,
× RELATED தெலுங்கு தேசத்திற்கு கிடைத்த வெற்றி...