ஸ்ரீநகர் : காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாஜக போட்டியிடாதது ஏன்? என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்ரீநகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்ற தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா பேசுகையில், “சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரை வளர்ச்சிப் பாதையில் கொண்டு வந்ததாக பாஜக கூறுகிறது. காஷ்மீரை வளர்ச்சிப் பாதையில் கொண்டு வந்ததாக கூறும் பாஜக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏன் வேட்பாளர்களை நிறுத்தவில்லை?,”என கேள்வி எழுப்பினார்.
The post காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாஜக போட்டியிடாதது ஏன்?: உமர் அப்துல்லா கேள்வி appeared first on Dinakaran.