×

சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது!

சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது. சவுக்கு சங்கர் மற்றும் காவல் துறையினர் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தேனியில் யூ டியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை கோவைக்கு கொண்டு செல்வதாக தகவல் வெளியானது. இந்நிலையில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவைக்கு அழைத்துச் சென்ற காவல்துறை வாகனம் தாராபுரம் அருகே விபத்துக்குள்ளானது. காலில் லேசான காயம் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மாற்று வாகனத்தில் கோவைக்கு அழைத்துச் சென்றனர்.

 

The post சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது! appeared first on Dinakaran.

Tags : Shavuk Shankar ,Shankar ,Shavku Shankar ,Teni. Goa ,
× RELATED பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய...