×

கடந்த 15 நாட்களில் பஞ்சாப் மாநில எல்லையில் 20 பாகிஸ்தான் டிரோன்கள் பறிமுதல்: எல்லைப் பாதுகாப்பு தகவல்

பஞ்சாப்: கடந்த 15 நாட்களில் பஞ்சாப் மாநில எல்லையில் 20 பாகிஸ்தான் டிரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என எல்லைப் பாதுகாப்பு தெரிவித்துள்ளது. டிரோன்களில் அனுப்பப்பட்ட 15 கிலோ போதைப்பொருள், 3 துப்பாக்கிகள் உட்பட ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் 2 பாகிஸ்தானியர்கள் உட்பட போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 6 பேரிடம் இருந்து ரூ. 1.10 லட்சம் கைப்பற்றப்பட்டதாகவும் எல்லைப்பாதுகாப்பு படை தகவல் அளித்துள்ளது.

The post கடந்த 15 நாட்களில் பஞ்சாப் மாநில எல்லையில் 20 பாகிஸ்தான் டிரோன்கள் பறிமுதல்: எல்லைப் பாதுகாப்பு தகவல் appeared first on Dinakaran.

Tags : Punjab state border ,Security ,Punjab ,Border Protection ,Border Security Information ,Dinakaran ,
× RELATED சிறையில் இருக்கும் எம்பியின் தம்பி கைது