×
Saravana Stores

தமிழகத்தில் இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. வரும் 28-ந் தேதி வரை கத்திரி வெயிலின் தாக்கம் அதிகளவு காணப்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையே ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு உள் தமிழக மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கோடை மழை பெய்யக்கூடும். மே 7ம் தேதி நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி , திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது. கோடை மழையை பொருத்தவரையில் கடந்த மார்ச் மாதம் முதல் இன்று வரையில் 74 சதவீதம் இயல்பைவிட குறைவாக பெய்துள்ளது.

பருவமழை மாதிரி கோடை மழை இருக்காது. வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் காற்று அழுத்தம் நிலவும் போது காற்றின் மிதப்புத் தன்மையால் தான் கோடை மழைக்கு வாய்ப்பு ஏற்படும். கோடை மழை வரும் போது வெப்பம் குறைய வாய்ப்புள்ளது. ‘அக்னி நட்சத்திரம்’ என்று கூறப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. பொதுவாகவே கத்திரி வெயிலின் போதுதான் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகும். ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்தே 100 டிகிரியை தாண்டி வெப்ப நிலை பதிவாகி வருகிறது. இன்று தொடங்கும் கத்திரி வெயிலின் தாக்கம் வரும் 28-ந் தேதி வரை நீடிக்கும். அதாவது 25 நாட்கள் கத்திரி வெயில் வாட்டி வதைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும் சில மாவட்டங்களில் கோடை மழையும் பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

The post தமிழகத்தில் இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Katri Sun ,Agni Star ,Tamil Nadu ,Chennai ,Katri ,
× RELATED சமுதாய மற்றும் வகுப்பு...