×

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 3000 பேருக்கு நலத்திட்ட உதவி: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார்

பொன்னேரி:  மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக மற்றும் இளைஞரணி சார்பில் மாநில இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தடப்பெரும்பாக்கம், வன்னிப்பாக்கம், நாலூர், வெள்ளிவாயல்சாவடி, திருவெள்ளைவாயல், பஜார், தேவதானம், வல்லூர் ஆகிய ஊராட்சிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி  நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் தலைமை வகித்தார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு அறுசுவை உணவு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் சுகுமாரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பாஸ்கர் சுந்தரம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் உதயசூரியன், கதிரவன், ஆனந்தகுமார், தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் தன்சிங், தமிழரசன், ராஜா, முனுசாமி, கஸ்தூரி தசரதன், சக்திவேல், ரவிச்சந்திரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தமிழரசன், துணை அமைப்பாளர்கள் சூரியராஜ், கிரிதரன், மாணவரணி விக்னேஷ் உதயன், கலைவாணன், தகவல் தொழில்நுட்ப அணி லோகநாதன், முரளி, மணி, சங்கர், மோகனசுந்தர், வடசென்னை அனல்மின் நிலைய திட்ட செயலாளர் ராமமூர்த்தி, பாபு, கோபி, முருகன், கார்த்திக், தமிழ்குடிமகன், பொன்னரசு உள்பட பலர் கலந்துகொண்டனர்….

The post உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 3000 பேருக்கு நலத்திட்ட உதவி: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Udayanidhi Stalin ,T. J.J. Govindarajan ,Ponneri ,Uthayanidhi Stal ,Secretary of State ,MLA ,Meenchur South Union Dishaghagam and Youth ,
× RELATED திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை