×

திருச்சி ஜமால் முகமது கல்லூரி புதிய முதல்வர் நியமனம்

 

திருச்சி, மே 4: திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் (தன்னாட்சி) புதிய முதல்வராக முனைவர் து.இ.ஜார்ஜ் அமலரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதே கல்லூரியில் கடந்த 36 ஆண்டுகளாக கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியராகவும், துறை தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இதையடுத்து புதிய முதல்வர் ஜார்ஜ் அமலரத்தினத்திற்கு கல்லூரியின் செயலரும்,

தாளாளருமான டாக்டர் ஏ.கே.காஜாநஜீமுதீன், பொருளாளர் ஹாஜி எம்.ஜே.ஜமால் முகமது, உதவி செயலர் முனைவர் கே.அப்துஸ்சமது, கவுரவ இயக்குனர் முனைவர் கே.என்.அப்துல்காதர் நிஹால், விடுதி இயக்குனர் முனைவர் முகமதுபாஜில், நிர்வாககுழுவினர், கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

The post திருச்சி ஜமால் முகமது கல்லூரி புதிய முதல்வர் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Trichy Jamal Mohammed College ,Trichy ,Dr. ,TU ,George Amalarathanam ,Jamal Mohammed College ,Dinakaran ,
× RELATED வருமான வரித்துறை அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்!