- நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம்
- தஞ்சை வேளாண்மைக் கல்லூரி
- நீடாமங்கலம்
- தஞ்சூர் வேளாண்மை கல்லூரி
- திருவாரூர் மாவட்டம்
- தின மலர்
நீடாமங்கலம், மே 4: நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் விதை சுத்திகரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் தஞ்சை வேளாண் கல்லூரி மாணவிகள் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் குறுவை சாகுபடியை முன்னிட்டு அதிக மகசூல் தரக்கூடிய நெல் ரகமான TPS-5 ன் விதை சுத்திகரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஊரக வேளாண் அனுபவப் பணியில் ஈடுபட்டுள்ள ஈச்சங்கோட்டை டாக்டர்.எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மாணவிகள் விதை சுத்திகரிப்பு பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். அதுமட்டுமின்றி விதை சுத்திகரிப்பின் நெறிமுறைகள் பற்றியும் மாணவிகள் அறிந்து கொண்டனர். TPS-5 நெல் ரகமானது 2014ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நெல் ரகமானது குறுவை சாகுபடிக்கு ஏற்றது. இதன் தனித்தன்மைகள் அதிக தூர்கட்டும் திறன், அதிக நெல்மணிகள் உடைய கதிர்கள், சாயாத தன்மையுடையவை, அதிக வைக்கோல் மகசூல் தரவல்லது. பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கான எதிர்ப்புத்திறன் கொண்டவை ஆகும். மேலும் குருத்துப் பூச்சி, இலை சுருட்டு பூச்சி, தத்துப் பூச்சிக்கு மிதமான எதிர்ப்பு திறன் கொண்டது. ஆகையால் குறுவையில் TPS-5 சாகுபடி செய்வதன் மூலம் அதிக மகசூல் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
The post நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் விதை சுத்திகரிப்பு பணி தீவிரம்: தஞ்சை வேளாண் கல்லூரி மாணவிகள் அதிக ஈடுபாடு appeared first on Dinakaran.