×

அம்மாபேட்டை பகுதியில் மும்முனை மின்சாரம் வழங்க வலியுறுத்தி உதவி செயற்பொறியாளரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு

 

தஞ்சாவூர், மே 4: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகில் விழுதியூர், குருப்பாலக்குடி, முனியூர், மணக்கால், சடையாங்கால் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மும்முனை மின்சாரம் சரியாக வராததால் தொடர்ந்து விவசாயிகள் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது.

எனவே தமிழக அரசு, தஞ்சை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி சாலியமங்கலம் உதவி செயற்பொறியாளரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வலியுறுத்தப்பட்டது. உடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முன்னணி ஊழியர்கள் விவசாயிகள் பங்கேற்றனர்.

The post அம்மாபேட்டை பகுதியில் மும்முனை மின்சாரம் வழங்க வலியுறுத்தி உதவி செயற்பொறியாளரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு appeared first on Dinakaran.

Tags : Executive ,Ammapet ,Thanjavur ,Thanjavur district ,Viluthiyur ,Kuruppalakudi ,Muniyur ,Manakal ,Sadayangal ,Dinakaran ,
× RELATED அம்மாபேட்டையை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும்