ஜெயங்கொண்டம், மே4: ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாய பொருட்களின் ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் மற்றும் நிலக்கடலையை முன் தினத்தை விட நேற்று ரூ 1000 குறைத்து விலை நிர்ணயிப்பதை கண்டித்தும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்தும் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடு ஞ் சாலையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் விலை பொருட்களில் ஒன்றான நிலக்கடலை நேற்று அதிக அளவில் மூட்டைகள் வந்திருந்ததால் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமே வந்திருந்ததாலும் விவசாயிகளின் கடலை மூட்டைகளை வைக்க இடம் இல்லை எனவும் கூறி விலை பொருட்களை மதிப்பு குறைத்து நிர்ணயித்துள்ளனர். வெளியூர் வியாபாரிகளும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வந்து பொருட்களின் விலை மதிப்பீடு செய்ய வேண்டும் என கேட்டு விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் முன்னால் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம் சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆதி மற்றும் போலீசார் பொதுமக்களிடம் சாலை மறியலை கலைத்து அலுவலகத்தில் சென்று கேட்கலாம் என கூறி அழைத்துச் சென்றனர். அங்கு சென்று ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது அதிகாரிகள் காலை 10 மணி அளவில் விவசாய பொருட்களுக்கான விலை பட்டியல் வெளியிடப்படும் அதை வைத்து தான் விலை நிர்ணயம் செய்து கொடுக்கின்றோம் நாங்களாக கொடுப்பதில்லை என கூறினா். பின்னர் பேச்சுவார்த்தையில் விலையில் மாற்றமில்லை அதனால் விவசாயிகள் தேவையில்லாதவர்கள் தங்களது பொருட்களை எடுத்துச் செல்லலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாக விவசாயிகள் கலைந்து சென்றனர்.
The post விளை பொருட்கள் விலை குறைப்பதை கண்டித்து ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் சாலை மறியல் appeared first on Dinakaran.