- விருதுநகர்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- Kariyapatti
- சிபிஎம் கட்சி
- விருதுநகர் மாவட்டம்
- Arjunan
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- தின மலர்
விருதுநகர், மே 4: காரியாபட்டி அருகே வெடிவிபத்து ஏற்பட்ட கல்குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வருக்கு சிபிஎம் கட்சியின் விருதுநகர் மாவட்ட செயலாளர் அர்ஜூனன் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: காரியாபட்டி உப்பிலிகுண்டு கிராமத்தில் இயங்கிய தனியார் கல்குவாரியில் மே.1ல் வெடி விபத்து ஏற்பட்டு, பணியில் இருந்த புதுப்பட்டி கந்தசாமி (47), சங்கரன்கோவில் துரை(25), குருசாமி(60)ஆகிய 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.25லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும். வெடி விபத்தால் கல்குவாரி அருகில் உள்ள டி.கடமன்குளம் கிராமத்தில் 50 வீடுகள் சேதமடைந்தன. பள்ளிக்கூடம், அங்கன்வாடி மைய கட்டிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த வீடுகளை பராமரிக்க உரிய நிதி வழங்க வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த கல்குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post வெடிவிபத்து கல்குவாரியை நிரந்தரமாக மூட கோரிக்கை appeared first on Dinakaran.