கம்பம், மே 4: கம்பம் புறவழிச்சாலைகளில் உள்ள பழுதான ஹைமாஸ் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கம்பம் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தேசிய நெடுஞ்சாலை சார்பில் ஹைமாஸ் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
பிரதான சாலைகளில் செல்லும் வாகனங்கள், ஊருக்குள்ளே செல்லும் சாலைகள் மற்றும் புறவழிச் சாலைகளில் உள்ள ரோடுகளை வாகன ஓட்டிகள் எளிதாக அடையாளம் கொண்டு கொள்வதற்காக இந்த ஹைமாஸ் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை இந்த ஹைமாஸ் விளக்குகளை அமைத்துள்ளது. அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இந்த ஹைமாஸ் விளக்குகளை பராமரித்து வருகிறது.
இந்நிலையில் கம்பம் புதுப்பட்டி சாலையில் உள்ள புறவழிச்சாலை பிரிவு, கம்பம் கூடலூர் புறவழிச்சாலை பிரிவு, உத்தமபாளையம் புறவழிச்சாலை பிரிவு ஆகிய இடங்களில் உள்ள விளக்குகள் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் எரியாததால் அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் பாதைகள் தெரியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஹைமாஸ் விளக்குகளை எரிய வைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post கம்பம் புறவழிச் சாலைகளில் பழுதான ஹைமாஸ் விளக்குகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.