×

நீர் மோர் பந்தல் திறப்பு

 

சிவகங்கை,மே.4: தமிழகம் முழுவதும் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டுமென அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கல்லல் தெற்கு ஒன்றிய செயலாளர் சேவியர்தாஸ் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான செந்தில்நாதன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்,மோர், வெள்ளரி, தர்பூசணி, இளநீர், சர்பத் போன்ற குளிர்பானங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன்,செந்தில்குமார், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் தூளவூர் பார்த்திபன்,ஒன்றிய பாசறை செயலாளர் தீபக், மாவட்ட பிரதிநிதி கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post நீர் மோர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Neer ,Sivagangai ,AIADMK ,Pandal ,Tamil Nadu ,District Secretary ,MLA ,Senthilnathan ,Kallal South Union ,Saviardas ,Neer Mor Panthal ,Dinakaran ,
× RELATED திருப்புவனம் பகுதிக்கு நிலையான...