×
Saravana Stores

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு இளநீர் விலை கிடுகிடு: ரூ.70க்கு விற்பனை

 

மண்டபம், மே 4: தமிழகம் முழுவதும் வெப்பத்தின் தாக்கத்தில் பொதுமக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். பொதுமக்கள் தாகத்தை தணிப்பதற்காக தர்ப்பூசணி, இளநீர், நுங்கு, கரும்பு ஜூஸ் கடைகளை தேடிச் செல்கின்றனர். இதனால் ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரை தேசிய நெடுஞ்சாலையில் ஏறத்தாழ 100க்கும் மேற்பட்ட கடைகளில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.

இதனால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் மற்றும் வாகனத்தில் பயணம் செல்லும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் இந்த கடைகளில் தாகத்தை தணித்து வருகின்றனர். இந்நிலையில் வெப்பத்தின் தாக்கம் எந்த அளவுக்கு அதிகரித்து வருகிறதோ, அதே அளவுக்கு இளநீர் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் வரை ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்ட இளநீர், தற்போது ரூ.60 முதல் 70 வரை விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தாலும் வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க விலையை பார்க்காமல் இளநீரை ருசித்து செல்கின்றனர்.

The post வெயிலின் தாக்கம் அதிகரிப்பு இளநீர் விலை கிடுகிடு: ரூ.70க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Mandapam ,Tamil Nadu ,Tarpusani ,Ilaneer ,Nungu ,Ramanathapuram ,Rameswaram ,
× RELATED மண்டபம் பகுதியில் குடியிருப்புகளில் மழைநீர் தேக்கம்