- சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை
- சாயல்குடி
- ராமநாதபுரம் மாவட்டம்
- எம் கரிசல்குளம்
- பிள்ளையார்குளம்
- நரிப்பையூர்
- கண்ணராஜபுரம்
- மூக்கையூர்
- ஒப்பிலன் மாரியூர்
சாயல்குடி, மே 4:ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதனை போன்று அருகில் உள்ள எம்.கரிசல்குளம், பிள்ளையார்குளம், நரிப்பையூர், கன்னிராஜபுரம், மூக்கையூர், ஒப்பிலான் மாரியூர், மூக்கையூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வர்த்தக நகராக உள்ளது.
மேலும் சாயல்குடி பஜார் வழியாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் நாகப்பட்டினம் கிழக்கு கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள், கனரக வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கிறது. இதனால் போக்குவரத்து மிகுந்த நகராக விளங்குகிறது. இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலையோரம் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சிலர் ஆக்கிரமித்து இருந்ததாக புகார் எழுந்தது.
இதனையடுத்து நடைபாதைகளை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறாக வியாபாரிகள் வைத்திருந்த விளம்பர பதாகைகள், முகப்பு பகுதிகளை கடலாடி தாசில்தார் ரெங்கராஜ் தலைமையிலும், சாயல்குடி பேரூராட்சி இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம் முன்னிலையிலும் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
மேலும் சாயல்குடி பஸ் ஸ்டாண்ட் மற்றும் அருப்புக்கோட்டை சாலை ராமேஸ்வரம் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் சங்கத்தினர் கால அவகாசம் கேட்டதால், மீதமுள்ள ஆக்கிரமிப்பு பகுதிகள் வரும் மே 8ம் தேதி அகற்றப்படும் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
The post சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் appeared first on Dinakaran.