×

அய்யலூர் பேரூராட்சியில் ஆக்கிரமிப்பால் பாதியில் நிற்கும் சாலை பணி: விரைந்து முடிக்க கோரிக்கை

 

வேடசந்தூர், மே 4: அய்யலூர் பேரூராட்சியில் ஆக்கிரமிப்பு காரணமாக பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அய்யலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 7வது வார்டு கலர்பட்டியலில் இருந்து குறிஞ்சி நகர் பகுதி வரை ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கடந்த ஏப்ரல் மாதம் வடிகாலுடன் பேவர் பிளாக் அமைக்கும் பணி துவக்கப்பட்டது.

இதில் குறிப்பிட்ட இடத்தில் ஆக்கிரமிப்பு உள்ளதால் பணி முடிவடையாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் கால்வாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தின் வழியே ஆபத்தான முறையில் வாகன ஓட்டிகள் பயணம் மேற்கொள்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் டூவீலர்களில் செல்வோர் அடிக்கடி பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி பேவர் பிளாக் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அய்யலூர் பேரூராட்சியில் ஆக்கிரமிப்பால் பாதியில் நிற்கும் சாலை பணி: விரைந்து முடிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ayyalur Municipality ,Vedasandur ,7th Ward ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் வேடசந்தூர் அருகே...