- விநாயகர் கோயில்கள்
- பழனி பிராந்தியம்
- திரளனோர்
- தரிசனம்
- பழனி
- கும்பாபிஷேக
- பாளையம் விநாயகர் கோயில்
- பாலசமுத்திரம் அய்யம்புல்லி விநாயகர் கோயில்கள்
- பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்
பழநி, மே 4: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பாளையம் விநாயகர் கோயில், பாலசமுத்திரம் அய்யம்புள்ளி விநாயகர் கோயில்களில் நேற்று கும்பாபிஷேக நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கடந்த 2 நாட்களாக யாகசாலைகள் அமைக்கப்பட்டு, புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் உள்ள கலசங்களை வைத்து அனுமதி பெறுதல், பிள்ளையார் வழிபாடு, நல்லெண்ணம் விழைதல், புனிதச்சொல் மொழிதல், பிள்ளையார் வேள்வி, காப்பு கட்டுதல், பெருநிலை வேள்வி, பேரொளி வழிபாடு, தொட்டவி அளித்தல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன.
நேற்று காலை யாகசாலையில் வைக்கப்பட்ட தீர்த்த கலசங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டது. தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. இந்நிகழ்ச்சியில் பழநி கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், சந்திரசேகர், மணிமாறன், சத்யா, பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
The post பழநி பகுதி விநாயகர் கோயில்களில் கும்பாபிஷேகம்: திரளானோர் தரிசனம் appeared first on Dinakaran.