ராஞ்சி: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் நிலமோசடியில் தொடர்புடைய சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜனவரி 31ம் தேதி கைது செய்யப்பட்டார். ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் ஹேமந்த் சோரன் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அமலாக்கத்துறை தன்னை கைது செய்ததை எதிர்த்து ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை பிப்ரவரி 28ம் தேதி முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதனை தொடர்ந்து நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதி, அமலாக்கத்துறை கைதுக்கு எதிரான சோரனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதே நேரம், 6ம் தேதி நடைபெறும் அவரது மாமா ராஜா ராம் சோரனின் இறுதி சடங்கில் போலீஸ் காவலின் கீழ் கலந்து கொள்வதற்கு சோரனுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
The post கைதுக்கு எதிரான முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.