பெய்ஜிங்: நிலவின் தென் துருவத்தில் இருந்து மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வந்து அறிவியல் ஆய்வு செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வு திட்டத்தின் ஒரு பகுதியாக சாங்இ-6 விண்கலத்தை சீனா நேற்று விண்ணில் செலுத்தியது. தெற்கு தீவு மாகாணமான ஹைனான் கடற்கரையில் உள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் -5 ஒய்8 ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவு குறித்த ஆய்வு வரலாற்றில் இது முதல் முயற்சி என்று சீனாவின் தேசிய விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. விண்கலத்தில் ஒரு ஆர்பிட்டர், ஒரு லேண்டர், அசெண்டர் மற்றும் பூமிக்கு திரும்பும் மறுநுழைவு கலன் என 4 பகுதிகளை கொண்டது.
The post நிலவுக்கு விண்கலத்தை ஏவியது சீனா appeared first on Dinakaran.