ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் இந்தாண்டு மலர் கண்காட்சி வரும் 10ம் தேதி துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதில் 60 ஆயிரம் மலர் தொட்டிகள் மூலம் 6.5 லட்சம் மலர்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் கண்காட்சி நடக்கும் 10 நாட்கள் பூங்காவுக்கான நுழைய கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.150ம், சிறியவர்களுக்கு ரூ.75ம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ரோஜா பூங்காவிலும் 10ம் தேதி ரோஜா கண்காட்சி துவங்கும் நிலையில், நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.100ம் சிறியவர்களுக்கு ரூ.50ம் வசூலிக்கப்பட உள்ளது. பழக்கண்காட்சி நடக்கும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.100 சிறியவர்களுக்கு ரூ.50ம் கட்டணமாக வசூலிக்கப்படும் என நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்தார்.
The post ஊட்டி தாவரவியல் பூங்காவில் நுழைவு கட்டணம் உயர்வு appeared first on Dinakaran.