- பாஜக
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- திமுக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- உலக பத்திரிகை சுதந்திர தினம்
சென்னை: பாஜ ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் நைந்து போயுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது: உலகப் பத்திரிகை சுதந்திர நாளில், ஒரு கொடும் யதார்த்தத்தை எதிர்கொள்வோம்: ‘பாஜ ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் நைந்து போயுள்ளது.’ பத்திரிகை சுதந்திரத்துக்கான தரவரிசையில் மிக மோசமான இடம், கவுரி லங்கேஷ், கல்புர்கி உள்ளிட்டோரின் படுகொலைகள்;
அதிகாரத்தில் இருப்போரைப் பற்றி உண்மையை எடுத்துரைக்கும் சித்திக் காப்பான், ரானா அய்யுப் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்களுக்கு விடுக்கப்படும் தொடர் அச்சுறுத்தல்கள் போன்றவை பாஜ ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை கவலைக்கிடம் ஆகியுள்ளதைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. ஜனநாயகத்தில் ஊடகத்தின் பங்கைப் போற்றும் அதே வேளையில், பேச்சு சுதந்திரத்தின் மாண்புகளை உயர்த்திப் பிடிக்கவும் பத்திரிகையாளர்கள் அச்சம், கொடுங்கோல் தணிக்கைமுறை இன்றிப் பணியாற்றவும் போராட உறுதியற்போம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
The post பாஜ ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் நைந்து போயுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு appeared first on Dinakaran.