- வியாபாரிகள் மாநாடு
- மதுரை
- சென்னை
- தமிழ்நாடு சேம்பர் ஆஃப் காமர்ஸ் கூட்டமைப்பு
- ஜனாதிபதி
- ஏ. எம் விக்கிரமராஜா
- பொதுச்செயலர்
- கோவிந்தராஜுலு
- பொருளாளர்
- ஏஎம் சதகத்துல்லாஹ்
- 41
- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு
- வணிகர்களின் விடுதலை முழக்க மாநாடு
- மதுரை பிரங்காங்குளம்
- வணிகர்கள்
சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா, பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 41வது வணிகர்தினம், வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரை வளையங்குளம், நான்குவழிச்சாலையில் 5ம் தேதி (நாளை) நடக்கிறது. மாநாட்டிற்கு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை வகிக்கிறார்.
தலைமைச் செயலாளர் ஆர்.ராஜ்குமார் மற்றும் மண்டல தலைவர்கள் முன்னிலை வகிக்கின்றனர். பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு வரவேற்புரையாற்றுகிறார். பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா மாநாட்டு தீர்மானத்தை முன்மொழிகிறார். வேலம்மாள் குழும நிறுவனர் எம்.வி.முத்துராமலிங்கம், நாகா புட்ஸ் தலைவர் கே.எஸ்.கமலக்கண்ணன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தலைவர் என்.ஜெகதீசன், ஏ.எம்.ஆர்.ஆர் மகாராஜா டால்மில் நிறுவனர் ஏ.எம்.எம்.ஆர்.சந்திரகுமார்,
ராஜ்மகால் மதுரை ஆர்.முருகானந்த், மதுரை பேமஸ் ஜிகர்தண்டா ஜி.ஜிந்தா மதார் மற்றும்பிரதர்தஸ், கல்யாணமாலை மீரா நாகராஜன் குத்துவிளக்கு ஏற்றுகின்றனர். கவிஞர் வைரமுத்து மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.மூர்த்தி, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பழனிவேல் தியாகராஜன் முதன்மை சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பேசுகின்றனர். வணிகர் தினத்தை முன்னிட்டு, அன்றைய தினம் தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.
The post மதுரையில் நாளை வணிகர் மாநாடு: கடைகளுக்கு விடுமுறை appeared first on Dinakaran.