×
Saravana Stores

கடாய் பனீர்

தேவையான பொருட்கள்

வெங்காயம்-2
தக்காளி-3
பச்சை மிளகாய்-2
குடை மிளகாய்-1
பட்டை-2
கிராம்பு-2
பிரிஞ்சி இலை-1
ஸ்பூன் மிளகாய்த்தூள்-2
ஸ்பூன் பனீர் பட்டர் மசாலா-1
பாக்கெட் பனீர்-1
ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது-1
தேவைக்கு உப்பு
தேவைக்கு வெண்ணெய்.

செய்முறை

ஒரு வாணலியில் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாயை வதக்கி பின்பு அரைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். வெங்காயம், குடைமிளகாயைப் பொடியாக அரிந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பனீரை சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு வாணலியில் வெண்ணெய் ஊற்றி பின்பு பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை போட்டு தாளிக்க வேண்டும். பின்பு நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை நன்கு வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு விழுதையும் சேர்க்க வேண்டும். அரைத்த விழுதை இதில் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும். பின்பு இரண்டு ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்க்க வேண்டும். ஒரு ஸ்பூன் பனீர் பட்டர் மசாலா மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கலவையை கொதிக்க விட வேண்டும். பின்பு நறுக்கிய பனீர் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான கடாய் பனீர் ரெடி.

The post கடாய் பனீர் appeared first on Dinakaran.

Tags :
× RELATED மேகி தோசை