×

சென்னையில் அக்டோபர் மாதம் வரை எவ்வித தங்கு தடையுமின்றி குடிநீர் வழங்கப்படும்: குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: சென்னையில் அக்டோபர் மாதம் வரை எவ்வித தங்கு தடையுமின்றி குடிநீர் வழங்கப்படும் என்று குடிநீர் வாரியம் கூறியுள்ளது. பெருநகர சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் தற்போதைய நீர் இருப்பை கருத்தில் கொண்டு சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கீழ்ப்பாக்கம், புழல், செம்பரம்பாக்கம், வீராணம், சூரப்பட்டு ஆகிய 5 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் நீர் சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட நீர் 111 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கீழ்ப்பாக்கம், புழல், செம்பரம்பாக்கம், வீராணம், சூரப்பட்டு ஆகிய 5 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் நீர் சுத்திகரிக்கப்படுகிறது

சுத்திகரிக்கப்பட்ட நீர் 111 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே சென்னையில் அக்டோபர் வரை தடையின்றி குடிநீர் விநியோகம் வழங்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

தென்னிந்தியாவில் குடிநீர் பற்றாக்குறை வர வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு மன நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் சென்னை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது

ஏற்கனவே பெங்களூரில் குடிநீர் பற்றாக்குறை மிக அதிகமாக இருக்கும் நிலையில் அந்நகரில் உள்ள மக்கள் தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர். ஆனால் அந்த நிலை தமிழகத்தில் உள்ள எந்த ஒரு நகருக்கும் வராது என்று கூறப்படுகிறது.

 

The post சென்னையில் அக்டோபர் மாதம் வரை எவ்வித தங்கு தடையுமின்றி குடிநீர் வழங்கப்படும்: குடிநீர் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Drinking water board ,Chennai Drinking Water Board ,
× RELATED குழாய் இணைக்கும் பணி அயனாவரம்...