×
Saravana Stores

கர்நாடகத்தின் தர்வாட் தொகுதியில் பாஜக-வுக்கு நெருக்கடி: 5வது முறையாக களமிறங்கும் பிரகலாத் ஜோஷிக்கு எதிர்ப்பு

கர்நாடகா: கர்நாடக மாநிலம் குப்பிலி, தர்வாட் தொகுதியில் 5வது முறையாக களமிறங்கியுள்ள ஒன்றிய பாஜக அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. லிங்காயஸ் சமூக மடாதிபதிகளின் எதிர்ப்பால் பாஜகவிற்கு நெருக்கடி முற்றியுள்ளது. கர்நாடகத்தில் கடந்த மாதம் 26ம் தேதி 14 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்த நிலையில் மிஞ்சியுள்ள மேலும் 14 தொகுதிகளில் வரும் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படும் தர்வாட் தொகுதியில் ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு தேர்தல் களத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தர்வாட் மக்களவை தொகுதிக்குட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் பாஜக தலா 4 இடங்களை கைப்பற்றி சம பலத்தில் உள்ளன. லிங்காயத் சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தும் இந்த தொகுதியில் பிரகலாத் ஜோஷிக்கு அச்சமூக மடாதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிரகலாத் ஜோஷியை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்த மடாதிபதி வாபஸ் பெற்றாலும் ஜோஷிக்கு எதிரான தர்மயுத்தம் தொடரும் என்று அறிவித்துள்ளார்.

20 ஆண்டுகளாக தர்வாட் தொகுதி எம்.பியாக உள்ள பிரகலாத் ஜோஷி தொகுதியின் வளர்ச்சிக்கு எதிராக எதுவும் செய்யவில்லை என்பது மடாதிபதிகள் குற்றசாட்டு மகத்தாயி நதி நீர் பிரச்சனை வறட்சி நிவாரணம் வழங்காதது உள்ளிட்ட பிரச்சனைகளை பொதுமக்கள் பாஜகவிற்கு எதிராக முன்வைக்கின்றனர். தர்வாட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சியின் ஓ.பி.சி அணியின் வினோத் சோசி களமிறங்கப்பட்டுள்ளார். கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசின் ஓராண்டு சாதனைகளை கூறி அவர் வாக்கு சேகரித்து வருகிறார். தர்வாட் மக்களவை தொகுதியில் பிரகலாத் ஜோஷி 5வது முறையாக வெற்றி பெறுவாரா அல்லது பாஜகவிடமிருந்து காங்கிரஸ் தர்வாட் தொகுதியை கைப்பற்றுமா என்பது தேர்தல் முடிவில் தெரியவரும்.

The post கர்நாடகத்தின் தர்வாட் தொகுதியில் பாஜக-வுக்கு நெருக்கடி: 5வது முறையாக களமிறங்கும் பிரகலாத் ஜோஷிக்கு எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Dharwad ,Karnataka ,Prakalat Joshi ,Union ,Minister ,Pragalat Joshi ,Kupli, Dharwad constituency ,Prahalat Joshi ,
× RELATED பாஜக மேலவை உறுப்பினர் சி.பி.யோகேஸ்வர் தனது பதவியை ராஜினாமா செய்தார்!