×
Saravana Stores

சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பே இல்லை: வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி

சென்னை: சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பே இல்லை என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். கத்திரி வெயில் தமிழ்நாட்டில் நாளை தொடங்க உள்ள நிலையில், 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும், இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்ப அலை வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; இன்று முதல் 6-ம் தேதி வரை வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

இதுவரை இல்லாத அளவில் இந்தாண்டு வெப்ப அலை அதிகரித்து காணப்படுகிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கோடை மழை பெய்துள்ளது. நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூரில் மே 7-ல் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கோடை மழை பெய்யும்போது வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளது. தருமபுரி, திருத்தணி, திருப்பத்தூர் உட்பட 10 இடங்களில் 42 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்.

கரூரில் இயல்பை விட 7% அதிகமாக 43 டிகிரி செல்சியஸ் 11வெப்பம் பதிவாகி உள்ளது. ஏப்ரல் தொடங்கி 27 நாட்கள் ஈரோட்டில் தொடர்ந்து 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் பதிவாகி உள்ளது. சென்னையில் அடுத்த 2 தினங்களுக்கு 39-40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்அடுத்த 5 தினங்களில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை மழை பெய்யக்கூடும். சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பே இல்லை எனவும் கூறினார்.

The post சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பே இல்லை: வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Meteorological Centre ,South Zone ,President ,Balachandran ,Chennai ,Katri Weil ,Tamil Nadu ,
× RELATED கனமழை எச்சரிக்கையால் மக்கள் அஞ்ச...