நீலகிரி: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி 07.05.2024 முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் “e” பாஸ் பெற்றே வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் நீலகிரி மாவட்ட பதிவு எண் “TN 43” பெற்றிருந்தால் அந்த வாகனங்களுக்கு “e” பாஸ் தேவையில்லை.
வெளிமாவட்டங்களில் இருந்து வாகனங்களை வாங்கி நீலகிரி மாவட்டத்தில் உரிமை மாற்றம் செய்திருக்கும் பொதுமக்கள் வாகனத்தின் அசல் வாகன பதிவுச்சான்று, காப்புச்சான்று மற்றும் நடப்பிலுள்ள புகைச்சான்று ஆகியவற்றுடன், உதகை வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தை அணுகினால், ஆவணங்களை சரிபார்த்து உதகை வட்டடாரப்போக்குவரத்து அலுவலகத்தால் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது
உதகை, கொடைக்கானலில் இ-பாஸ் முறையை அறிமுகப்படுத்தியது கவலை அளிப்பதாகவும், சுற்றுலா தொடர்பான தொழில்களை நம்பியுள்ளோர் கவலை தெரிவித்துள்ளனர். எனினும், கட்டுப்பாடு அவசியம் என சூழலியல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர். உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல இ-பாஸ் கட்டாயம் எனவும், வரும் 7-ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி அங்கு செல்ல முன்கூட்டியே இ-பாஸ் பெற வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் முறை மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளார். எனினும், இ-பாஸ் முறைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள சில பயணிகள், கூட்ட நெரிசல் உள்ள நாளில் வருவதை தவிர்க்க இது உதவும் என்றார்.
The post நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை appeared first on Dinakaran.