×
Saravana Stores

வெயில் ருத்ர தாண்டவம்: நீர் நிலைகளை தேடி அலையும் யானைகள் கூட்டம்

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வனங்களில் யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு போதிய உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் இருந்து வருகிறது. பல இடங்களில் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் வனங்கள் எரிந்து சேதமாகி உள்ளது. இதனால், யானைகள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி செல்கின்றது. இந்நிலையில், சேரங்கோடு சின்கோனா தேயிலைத்தோட்டம் பகுதியை ஒட்டியுள்ள நீர் நிறைந்த புஞ்சை நிலத்தில் யானைகள் கூட்டம் கூட்டமாக குட்டியுடன் முகாமிட்டுள்ளது.

அதில், ஒரு யானை பிறந்து சில நாட்களே ஆன தனது குட்டியை பாதுகாப்புடன் அரவணைத்து செல்கிறது. தாயிடம் பால் குடித்தவாறு குட்டி யானை தாயின் பின்னால் பாதுகாப்பாக செல்கிறது. பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் வனத்துறையினர் கூட்டமாக முகாமிட்டுள்ள யானைகளை கண்காணித்து வருகின்றனர். இதேபோல், பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் பல இடங்களில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டு வருவது குறிப்பிடதக்கதாகும்.

The post வெயில் ருத்ர தாண்டவம்: நீர் நிலைகளை தேடி அலையும் யானைகள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : PANDALUR ,Nilgiri district ,Kudalur ,Dinakaran ,
× RELATED பந்தலூர் அருகே முறையான கழிப்பறை இல்லாமல் டேன்டீ தொழிலாளர்கள் அவதி