- அமேதி
- ராகுல் காந்தி
- சரிபாரெலி
- பிரதமர் மோடி
- கொல்கத்தா
- மோடி
- ரய்பரெலி
- வயநாடு
- மேற்கு வங்கம்
- ரகுலகந்தி
- காங்கிரஸ்
- ராபரெலி
கொல்கத்தா : வயநாடு தொகுதியில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற பயத்தில் தான் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல்காந்தி அறிவிக்கப்பட்ட நிலையில் மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், “அமேதி தொகுதியை பார்த்து அச்சமடைந்த ராகுல் காந்தி தற்போது ரேபரேலியை தேர்வு செய்துள்ளார். காங்கிரஸின் மிகப்பெரிய தலைவர் தேர்தலில் போட்டியிடாமல் ஓடி ஒளிந்து கொள்வார் என நான் கூறியது நடந்தது. நான் கூறியது போலவே ராஜஸ்தானுக்கு ஓடியவர் மாநிலங்களவை மூலம் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார்.
வயநாட்டில் ராகுல் தோல்வியடைவார், வாக்குப்பதிவு முடிந்ததும் வேறு தொகுதியை தேர்வு செய்வார் என ஏற்கனவே கூறினேன். அச்சப்பட வேண்டாம் என அனைவரையும் பார்த்து கூறும் அவர்கள், அமேதி தொகுதியை பார்த்து அச்சப்படுகின்றனர். நான் அவர்களை பார்த்து கூறுகிறேன் அச்சப்பட வேண்டாம். ஓடி ஒளிய வேண்டாம். நாடு முழுவதும் எவ்வளவு முயற்சி செய்தாலும் காங்கிரஸ் 50 இடங்களில் கூட வெற்றி பெறாது. மக்களவையில் எதிர்க்கட்சிகளில் யார் பெரிய கட்சி என்று பார்த்தவே இண்டியா கூட்டணி இடையே போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் மதத்தின் அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்தியது,”இவ்வாறு பேசினார்.
The post அமேதி தொகுதியை பார்த்து அச்சமடைந்த ராகுல் காந்தி தற்போது ரேபரேலியை தேர்வு செய்துள்ளார் : பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை!! appeared first on Dinakaran.