×
Saravana Stores

மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் எனும் உலக சாதனை விருது அறிவிப்பு

சென்னை: கேப்டன் விஜயகாந்த் மறைந்த நாள் முதல் இப்போது வரையிலும் தினம்தோறும் கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்திற்கு தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். காலை 8 மணி தொடங்கி இரவு 8 மணி வரையிலும் மக்கள் வரிசையாக நின்று பூக்கள் மற்றும் பல்வேறு பூஜை பொருட்களைக் கொண்டு வழிபட்டு வருகின்றனர். வரக்கூடிய மக்களில் பெரும்பாலானவர்கள் அவரை ஒரு தெய்வமாக பார்க்கின்றனர்.

அவர் ஏராளமான ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளதால் அவரை கடவுளாக வணங்கி செல்வோர் அதிகம். குழந்தைகளோடு வந்து அவரை வழிபட்டு செல்லும் அஞ்சலி செலுத்தும் பொது மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறையவில்லை.அவர் மறைந்து 125 நாட்கள் கட்ந்துள்ள நிலையில் இதுவரை சுமார் 15 லட்சம் பேர் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி உள்ளதாக தெரிய வருகிறது. அது மட்டுமல்லாது வருவோர் அனைவருக்கும் மதியம் 12மணியிலிருந்து இரவு வரையிலும் தரமான உணவு அன்னதானமாக வழங்கப்படுகிறது. உலகில் எத்தனையோ தலைவர்கள் இருந்தாலும் அவர்களது நினைவிடங்களில் உணவு வழங்கப்படுவதில்லை.

அன்னதானம் என்பது அவர் மறைந்த நாள் முதல் இன்று வரையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. வாழ்நாள் முழுக்க தொடர்ந்து அன்னதானம் நடைபெறும் என்று பிரேமலதா விஜயகாந்த் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில் அவரது நினைவிடத்திற்கு வந்த பொது மக்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு உலக சாதனை விருதாக ‘லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ சார்பில் கேப்டன் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

The post மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் எனும் உலக சாதனை விருது அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DMUDI ,President ,Vijayakanth ,CHENNAI ,Tamil Nadu ,Coimbatore ,DMDK ,
× RELATED மதுரையில் கனமழை; மக்களுக்கு தேவையான...