×

பாலியல் புகார்: ரேவண்ணாவுக்கு மீண்டும் நோட்டீஸ்

டெல்லி: பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவுக்கு சிறப்புப் புலனாய்வுக்குழு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 24 மணி நேரத்துக்குள் ஆஜராகவில்லை எனில் கைது நடவடிக்கை பாயும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரேவண்ணா தாக்கல் செய்த முன்ஜாமின் மனு சற்றுநேரத்தில் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. சிறப்பு நீதிமன்ற உத்தரவை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்று போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post பாலியல் புகார்: ரேவண்ணாவுக்கு மீண்டும் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Revenna ,Delhi ,minister ,Revanna ,Mujam ,Dinakaran ,
× RELATED டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி