சென்னை: கடும் வெப்பம் காரணமாக தமிழ்நாட்டில் 2.5 கோடி தென்னை மரங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக லட்சக்கணக்கான தென்னை மரங்கள் அழியும் தருவாயில் உள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தென்னை மரம் ஒன்றுக்கு தினமும் 40 லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில் வறட்சி நிலவுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, உடுமலை தாலுகாக்களில் உள்ள தென்னை விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக டேங்கர் லாரிகளுக்கு ரூ.1,200 முதல் ரூ.1,800 வரை செலவாகிறது என்றும் கடும் வெப்பம், வறட்சி காரணமாக பல ஆண்டுகளாக வளர்த்த தென்னை மரங்களை வெட்டும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
The post கடும் வெப்பம் காரணமாக தமிழ்நாட்டில் 2.5 கோடி தென்னை மரங்கள் பாதிக்கப்படும் அபாயம்: விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.