வாரணாசி: வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட இருப்பதாக பிரபல நகைச்சுவை நடிகர் அறிவித்துள்ளார். பிரதமர் மோடி காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி உள்ளிட்டோர் போன்று மெமிக்ரி செய்து பிரபலமானவர் சியாம் ரங்கீலா ராஜஸ்தானை சேர்ந்த ஸ்டாண்டப் காமெடியனும், மெமிக்ரி கலைஞருமான இவர் கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது பாஜகவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். இதனிடையே கடந்த 2022ம் ஆண்டில் ஆம்.ஆத்மீயில் இணைந்த சியாம் ரங்கீலா வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.
2014ல் மோடியின் சீடனாக இருந்து ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக ஏராளமான விடீயோக்களை வெளியிட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் நிலைமை மாறிவிட்டதாகவும் விரைவில் வாரணாசி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் குறிப்பிட்டார். சூரத் இந்தூர் தொகுதிகளில் எதிர் வேட்பாளர்கள் இல்லாமல் பாஜகவினர் வெற்றி பெற்றது போல் பிரதமர் மோடி வெற்றி பெற்றுவிட கூடாது என்பதற்காக அவரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக களமிறங்க இருப்பதாக குறிப்பிட்டார். இந்த அறிவிப்புக்கு பிறகு தமக்கு வாழ்த்தும், வரவேற்பும் பெருகி வருவதாக தெரிவித்த சியாம் வாரணாசியில் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
The post வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து களமிறங்கும் இளம் நடிகர்: மக்கள் ஆதவுடன் வெற்றிபெறுவேன் சியாம் ரங்கீலா நம்பிக்கை appeared first on Dinakaran.