துறையூர், மே 3: திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட முருங்கப்பட்டி கிராமத்தில் அங்கக வேளாண்மை விவசாயி பிரபாகரன் (63) என்பவரிடம் வேளாண் கல்லூரி மாணவிகள் சீதாப்பழத்தில் கை மகரந்தசேர்க்கை செய்வதற்கான பயிற்சி பெற்றனர். துறையூர் அடுத்த கண்ணனூர் இமயம் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகளான நந்தனா, காவ்யா, கீர்த்தனா, லாவண்யா,லின்சி ஆரோக்யமேரி, மானசா, மோனிகா, முத்துசாரதி ஆகியோர் ஊரக வேளாண் பணி அனுபவத்தின் ஒரு பகுதியாக, முருங்கப்பட்டி கிராமத்தில் விவசாயியிடம் பயிற்சி பெற்றனர். அவர் கடந்த 8 ஆண்டுகளாக பாரம்பரிய நெல் வகைகள் (கருங்குறுவை, பூங்காரு, தூயமல்லி, இரத்தசாலி), பப்பாளி, சீதாப்பழம் போன்ற பல்வேறு பயிர்களை அங்கக முறையில் சாகுபடி செய்து வருகிறார். விவசாயி பிரபாகரனிடம் அங்கக வேளாண்மையின் நன்மைகள், செயல்முறைகள், அதில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து மாணவிகள் கேட்டு அறிந்து கொண்டனர். மேலும் மாணவிகள் சீதாப்பழத்தில் கை மகரந்த சேர்க்கையினை பற்றி சிறப்பான செயல்முறை விளக்கத்தினை பெற்று, அதனை செய்து பார்த்து பயிற்சியும் பெற்றனர்.
The post முருங்கப்பட்டியில் வேளாண் கல்லூரி மாணவிகள் அங்கக வேளாண்மை குறித்து பயிற்சி appeared first on Dinakaran.