×
Saravana Stores

தஞ்சாவூரில் இருந்து பொதுவினியோகத்திற்காக கன்னியாகுமரி, திருப்பத்தூருக்கு 2500 டன் அரிசி அனுப்பி வைப்பு

தஞ்சாவூர்,மே3: தஞ்சாவூரில் இருந்து பொதுவினியோகத்திற்காக விகன்னியாகுமரி மற்றும் திருப்பத்தூருக்கு தலா 1250 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சாவூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோகத்திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும். அதன்படி நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2500 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் சரக்கு ரயிலில் தலா 21 வேகன்களில் தலா 1,250 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு கன்னியாகுமரி மற்றும் 1,250 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் திருப்பத்தூருக்கு பொது வினியோக திட்டத்திற்காக நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

The post தஞ்சாவூரில் இருந்து பொதுவினியோகத்திற்காக கன்னியாகுமரி, திருப்பத்தூருக்கு 2500 டன் அரிசி அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Kanyakumari ,Tiruppattur ,Viganiyakumari ,Thanjavur district ,Tamil Nadu ,
× RELATED தஞ்சை ஒரத்தநாடு அருகே உள்ள அதிமுக...