பெரம்பலூர், மே 3: பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை சார்பாக, மது ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது. பெரம்பலூர் நகராட்சி துறைமங்கலத்தில் உள்ள, தமிழ்நாடு அரசு நெடுஞ் சாலைத்துறை (கட்டு மானம் மற்றும் பராமரிப்பு) சார்பாக நேற்று(2ஆம்தேதி) வியாழக் கிழமை காலை 11 மணியளவில் மது ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியை பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை கோட்டசெயற்பொறியாளர் கலைவாணி கொடியசைத் துத் தொடங்கிவைத்தார். பெரம்பலூர் உதவி கோட்ட பொறியாளர் மாயவேலு, உதவி பொறியாளர் ராஜா, சாலை ஆய்வாளர் செல்வ ராஜ் மற்றும் அலுவலகப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்ட இந்த மது ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி, துறைமங்கலத் தில் உள்ள தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் தொடங்கி தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்துக்கழக பெரம்பலூர் கிளை பணிமனை (டெப்போ) வரை சென்று மீண்டும் நெடுஞ்சாலைத் துறை கோட்டப்பொறியா ளர் அலுவலகத்தை வந்தடைந்தது.
The post அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் பெரம்பலூரில் ஆய்வுக்கு பின் ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை இயக்குனர் உத்தரவு பெரம்பலூரில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.