கொள்ளிடம், மே 3: கொள்ளிடத்தில் மே தினத்தை முன்னிட்டு 20 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 2 மணிநேர தொடர் சிலம்பாட்ட சாதனையில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சீனிவாச மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கத்தில் மே தினத்தை முன்னிட்டு இரண்டு மணிநேர தொடர் உலக சாதனை முயற்சியாக சிலம்பாட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருநெல்வேலி, தர்மபுரி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 20 மாவட்டங்களை சேர்ந்த 600 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 2 மணி நேர உலக சாதனை முயற்சியாக தொடர் சிலம்பாட்டத்தில் ஈடுபட்டனர். உலக நன்மைக்காகவும் தொழிலாளர் நலன் விழிப்புணர்வை கருத்தில் கொண்டும் நடத்தப்பட்ட சிலம்பாட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சீர்காழியை சேர்ந்த மாவீரன் சிலம்பாட்ட குழுவினர் சார்பில் செய்திருந்தனர். சிலம்பாட்டத்தை பள்ளியின் தாளாளர் முருகேசன் துவக்கி வைத்தார். 20 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
The post மே தினத்தை முன்னிட்டு 2 மணி நேர தொடர் சாதனை சிலம்பாட்டம் appeared first on Dinakaran.