விருதுநகர், மே 3: விருதுநகர் எஸ்எப்எஸ் மெட்ரிக் பள்ளியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 50 மாணவர்கள் பங்கேற்ற சிறப்பு கோடை கால உண்டு உறைவிட இசை பயிற்சி முகாம், சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் 50 மாணவர்கள் கலந்து கொண்ட கோடை கால உண்டு உறைவிட தலைமை பண்பு பயிற்சி முகாம்களை கலெக்டர் ஜெயசீலன் நேற்று துவக்கி வைத்தார்.
விழாவில் கலெக்டர் பேசுகையில், மாவட்டத்தில் மாணவர்களின் தனித்திறமையை மேம்படுத்தும் வகையில் மே 2 முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு பல்வேறு கோடை கால உண்டு, உறைவிட பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
பயிற்சி வகுப்பில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடத்துடன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒரு தனித்திறமைகள் உள்ளன. அந்த அடிப்படையில் மாணவர்களுக்குள் இருக்கும் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில் கோடை கால பயிற்சி முகாம்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் தங்களது தனித்திறமைகளை வளர்த்து வாழ்வை வளப்படுத்திட வேண்டும் என்றார்.
The post கோடை கால பயிற்சி முகாம்: கலெக்டர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.